This Article is From Aug 21, 2019

எவரெஸ்ட் சிகரத்தில் மலைபோல் குவியும் குப்பை! அகற்ற முடியாமல் திணறும் நேபாளம்!!

சமீபத்தில் சிகரம் ஏறுபவர்களுக்கு நேபாள அரசு ஒரு ஆஃபரை அறிவித்திருந்தது. இதன்படி, சிகரம் ஏறி திரும்பி வருபவர்கள் 18 கிலோ குப்பையை கொண்டு வந்தால் அவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்பி அளிக்கப்படும் என்று அரசு சலுகை வழங்கியது.

எவரெஸ்ட் சிகரத்தில் மலைபோல் குவியும் குப்பை! அகற்ற முடியாமல் திணறும் நேபாளம்!!

நேபாளத்திற்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

Kathmandu:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனை அகற்றுவதற்கு நேபாள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. 

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் தரையில் இருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்டது. இதன் உச்சத்தை அடைவது என்பது உலக சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை அடையும் விதமாக ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கானோர் எவரெஸ்டுக்கு செல்கின்றனர். 

நேபாள நாட்டில் அமைந்திருக்கும் திபெத் கும்பு பசாங் லாமு என்ற உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சிகரத்தின் உச்சிக்கு செல்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அப்படியே சிகரத்தில் விட்டு விட்டு செல்கின்றனர். இவை மக்காமல் ஆண்டுக்கணக்காக சேர்ந்து மலைபோல் அங்கு குவிந்திருக்கிறது.

இதற்கிடையே புவி வெப்பமயமாதல் காரணமாக சிகரத்தில் இருக்கும் பனிப் பாறைகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் சிகரத்தை அடையும் பாதையில் உயிரிழந்தவர்கள், குப்பைகள் உள்ளிட்டவை வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த அசுத்தங்களை அகற்ற முடியாமல் நேபாள அரசு திணறி வருகிறது. 

குப்பைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையைக 30 மைக்ரான் தடிமனுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு நேபாள அரசு தடை விதித்திருக்கிறது. நடப்பாண்டில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற 885 பேரில் 11 பேர் உயிரிழந்தனர். 

இதற்கு போதிய அனுபவம் இன்மை மற்றும் மோசமான வானிலையே காரணம் என்று கூறப்படுகிறது. 
 

.