This Article is From Sep 10, 2018

நீட் பி.ஜி., எம்.டி.எஸ். தேர்வு தேதிகள் அறிவிப்பு

நீட் தேர்வு – 2019 தொடர்பான அறிவிப்புகளை தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ) வெளியிட்டுள்ளது

நீட் பி.ஜி., எம்.டி.எஸ். தேர்வு தேதிகள் அறிவிப்பு

நீட் பி.ஜி., எம்.டி.எஸ். தேர்வு தேதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்

New Delhi:

புதுடெல்லி : நீட் போஸ்ட் கிராஜுவேட், நீட் எம்.டி.எஸ்., வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ ஆகிய தேர்வுகளை தேசிய தேர்வுகள் வாரியமான என்.பி.இ. நடத்துகிறது. இந்த நிலையில் Multiple Choice Question முறையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேதியை என்.பி.இ. அறிவித்துள்ளது.

இதன்படி நீட் எம்.டி.எஸ். தேர்வு டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும் எப்.எம்.ஜி.இ. 2019, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ சி.இ.டி.-2019 ஆகிய தேர்வுகளும் டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும்.

நீட் பி.ஜி. தேர்வு ஜனவரி 6, 2018-ல் நடைபெறும். நீட் பி.ஜி. 2019 மற்றும் நீட் எம்.டி.எஸ் 2019 ஆகிய தேர்வுகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளுக்கான தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அக்டோபரில் www.nbe.edu.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். இவை அனைத்தும் Multiple choice question – MCQ முறையில் கம்ப்யூட்டரில் நடத்தப்படும்.

 

.