''போலீஸ் மீதான மக்களின் மனநிலை மாற வேண்டும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!!

2 நாள் நடைபெற்ற இந்த மாநாட்டை புதுவை துணை நிலை கவர்னர் கிரண் பேடி தொடங்கி வைத்தார். 

''போலீஸ் மீதான மக்களின் மனநிலை மாற வேண்டும்'' - உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்!!
Lucknow:

போலீஸ் மீதான மக்களின் மனநிலை மாற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அனைத்திந்திய போலீஸ் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

நாம் சர்வ சாதாரணமாக உட்கார்ந்துகொண்டு போதைப் பொருள் கட்டுப்பாடு, கடத்தல், தீவிரவாதம், நக்சல் அச்சுறுத்தல், கள்ள நோட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த விமர்சிக்கிறோம். நடைமுறையில் இந்த குற்றச் செயல்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புக்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

போலீசைப் பற்றி மக்களும், மக்களைப் பற்றி போலீசும் ஒரு மனநிலையை கொண்டிருக்கிறார்கள். இது மாற வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார். 2 நாள் நடைபெற்ற இந்த மாநாட்டை புதுவை துணை நிலை கவர்னர் கிரண் பேடி தொடங்கி வைத்தார்.