‘பஞ்சாபில் காங்கிரசுக்கு கூட்டணியே தேவையில்லை‘- அமரிந்தர் சிங் அசாத்திய நம்பிக்கை

மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டே 13 இடங்களிலும் வெற்றிபெறும் என அமரிந்தர் கூறியுளளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘பஞ்சாபில் காங்கிரசுக்கு கூட்டணியே தேவையில்லை‘- அமரிந்தர் சிங் அசாத்திய நம்பிக்கை

சோனியா காந்தியுடன் அமரிந்தர் சிங்


New Delhi: 

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு, அதில் வெற்றி பெறும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக வியூகங்களை வகுக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான அகமது படேல், ஏ.கே. அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரிந்தர் சிங் அளித்த பேட்டியில், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. இங்கு கூட்டணி ஏதும் தேவையில்லை. தனித்து போட்டியிட்டே எங்களால் 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். தேசிய அளவிலான கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகளை நாங்கள் தேசிய தலைமையிடம் விட்டு விட்டோம். மாநிலத்தில் போதைப் பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................