ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்! பிம்பத்தை மாற்றுகிறதா காஷ்மீர்?!!

காஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர்.

ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்! பிம்பத்தை மாற்றுகிறதா காஷ்மீர்?!!

ராணுவத்தின் நடவடிக்கை மாநிலத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Samba, Jammu and Kashmir:

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள ஷெர் பச்சா மைதானத்தில் ஆள்சேர்பு முகாம் நடைபெற்றது. 

மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலமாக இருந்தபோது வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காஷ்மீர் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் முதன்முறையாக சம்பா பகுதியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், 'ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விரும்பி, முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இது அவர்களது நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மையை காட்டுகிறது. முகாமில் பார்த்தவரையில் இளைஞர்கள் ஆர்வத்துடனும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனும் காணப்பட்டனர். இது காஷ்மீர் இளைஞர்கள் சரியான திசையை நோக்கி செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

.

7bqolgu

The 10-day recruitment rally began on November 3 and will go on till November 12. 

காஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர்.

முகாமில் பங்கேற்ற அமன் குமார் என்ற இளைஞர் கூறுகையில், 'மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்தேன். நான் சிறுவனாக இருக்கும்போதே ராணுவத்தில் சேர வேண்டும், சீருடை அணிந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது' என்றார். 

மொத்தம் 10 நாட்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. நேற்று தொடங்கிய இந்த முகாம் 12-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 

More News