முதலமைச்சர் பட்டியலில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம் பெறவில்லை : கட்சி வட்டாரம்

மகாராஷ்டிராவுக்கு வெளியே கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக மதிப்புள்ள நபரை அவர்கள் விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் பட்டியலில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம் பெறவில்லை : கட்சி வட்டாரம்

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 12 கிடைக்கும்.

New Delhi:

முதலமைச்சருக்கான பட்டியலில்  சிவசேனாவின் இளைஞரணி தலைவரான ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம்பெறவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 

சிவசேனா கட்சி சுபாஷ் தேசாய் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் பெயர்களை முன் மொழிந்தது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் அவற்றை நிராகரித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   மகாராஷ்டிராவுக்கு வெளியே கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக மதிப்புள்ள நபரை அவர்கள் விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் வரையறைகள் சேனாவுடன் விவாதிக்கப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 12 கிடைக்கும். சபாநாயகர் பதவியைப் பொறுத்தவரை, தேசியவாத காங்கிரஸ் கட்சி அதனை காங்கிரஸுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News