காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா சித்து …? - கட்சியின் மூத்த தலைவர்களின் பதில்

பஞ்சாப் மாநிலம் கிழக்கு அமிர்தசரஸ் தொகுதி எம்.எல்.ஏவான சித்து அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா சித்து …? - கட்சியின் மூத்த தலைவர்களின் பதில்

அடுத்த தலைமையைத் தேர்வு செய்வது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனைக்கூட்டமும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


New Delhi: 

கடந்த மாதம் மூத்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தின் இறப்பிற்கு பின் காலியாக இருந்த டெல்லி காங்கிரஸ் தலைவருக்கான பதவிக்கு நவ்ஜோத் சிங் சித்து தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில பொறுப்பாளார் பி.சி. சாக்கோ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இது குறித்து அவர் பேசிய போது “எனது கவனத்துக்கு உட்பட்ட வரை அப்படி ஒரு திட்டம் இல்லவே இல்லை. ஷீலா தீட்சித் மறைவுக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் தரப்பில் அடுத்த தலைமையைத் தேர்வு செய்வது தொடர்பாக எந்த ஒரு  ஆலோசனைக்கூட்டமும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் கிழக்கு அமிர்தசரஸ் தொகுதி எம்.எல்.ஏவான சித்து அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் சித்து டெல்லி காங்கிரஸ் தலைவராக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................