விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

சென்னையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணத்தில் விமானப்படைக்கு சொந்தமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விமானப்படை பயிற்சிகள், பேரிடர் மீட்பு பணி ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறும். இந்த நிலையில், இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் 3 பேர் இருந்ததாகவும், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சில பாகங்கள் சேதம் அடைந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................