லண்டனில் நடைபெற இருக்கும் நேட்டோவின் அடுத்த சந்திப்பு!

நேட்டோவின் முதல் தலைமை செயலகம் லண்டனில் தான் துவங்கப்பட்டது. லண்டன் முதலில் இதனை உருவாக்கிய 12 நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

லண்டனில் நடைபெற இருக்கும் நேட்டோவின் அடுத்த சந்திப்பு!

நேட்டோவின் 70வது ஆண்டு விழாவில் இந்த கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்ட இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டோலன் பெர்க்.

நேட்டோ அமைப்புகளின் தலைவர்கள் 2019 டிசம்பரில் லண்டனில் சந்திக்கவுள்ளனர். இதனை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த கூடத்துக்கான இடத்தை முடிவு செய்வதுமே ஒரு உள்நோக்கத்துடனேயே அமைந்துள்ளது. பிரிட்டன் அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதால் இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்ற நேடோ சந்திப்பு இந்த கூட்டமைப்பில் உள்ள பிரெசெல்ஸில் நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பல ஐரோப்பிய நாடுகளுடன் சிறப்பான உறவு இல்லை என்பது அதில் தெரியவந்தது. ஸ்டோலன் பெர்க் கூறும்போது நேட்டோவின் 70வது ஆண்டு விழாவில் இந்த கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்ட இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்தார்.

நேட்டோவின் முதல் தலைமை செயலகம் லண்டனில் தான் துவங்கப்பட்டது. லண்டன் முதலில் இதனை உருவாக்கிய 12 நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

லண்டனில் இந்த சந்திப்பு நடப்பது ஒரு அருமையான வாய்ப்பு. இதில் உலக மக்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான தீர்மாணம் ஆகியவை இடம் பெறும் என்றும், ஒரு பில்லியனின் மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமளிக்கும் விஷயங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com