This Article is From Jan 13, 2020

'NPR பணிகளை நிறுத்துங்கள்' - மாநில முதல்வர்களுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR பணிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் தொடங்கவில்லை. இந்த நடவடிக்கை NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அடிப்படையாக அமையும். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் அரசால் வெளியேற்றப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

'NPR பணிகளை நிறுத்துங்கள்' - மாநில முதல்வர்களுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

New Delhi:

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் NPR பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த என்.பி.ஆர்., என்.சி.ஆர். எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அடிப்படையாக அமையும்.

தற்போது வரையில் என்.பி.ஆர். பணிகளை மேற்கு வங்கமும், கேரளாவும் நிறுத்தி வைத்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் என்.பி.ஆர். பணிகளை தொடங்க விட மாட்டோம் என்று கூறியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் பீகார் மாநிலம், நவீன் பட்நாயக்கின் ஒடிசா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திரா உள்ளிட்டவை காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கு ஒத்துப்போகவில்லை.

தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR பணிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் தொடங்கவில்லை. இந்த நடவடிக்கை NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அடிப்படையாக அமையும். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் அரசால் வெளியேற்றப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

என்.ஆர்.சி. என்பது இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த என்.ஆர்.சி. முஸ்லிம்களுக்கு எதிரானது என்று விமர்சனங்கள் எழுகின்றன. 

இதன் தொடர்ச்சியாக என்.ஆர்.சி.யை திரும்பப் பெற வலியுறுத்திய நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இருப்பினும், என்.ஆர்.சி.யை  தற்போதைக்கு நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியுள்ளார். 

கடந்த மாதம் நவின் பட்நாயக் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் தங்களது மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி.யை நிறைவேற்ற விட மாட்டோம் என்று தெரிவித்தனர். இருப்பினும், என்.பி.ஆர். குறித்து அவர்கள் உறுதியான தகவலை தெரிவிக்கவில்லை. 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது. இருப்பினும் என்.ஆர்.சி. விவகாரத்தில் தான் பின் வாங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

தனது பீகார் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று அவர் கூறியுள்ளார். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில், என்.ஆர்.சி. பணிகளை நிறுத்தி வைத்தார். இவற்றை பாஜக செய்ய வேண்டும் என்று நினைத்தால் தனது பிணத்தின் மீது செய்யட்டும் என்று அவர் காட்டமாக கூறியிருந்தார். 

இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது மாநிலத்தில் என்.பி.ஆர். பணிகளை நிறுத்தி வைத்ததோடு மட்டுமின்றி, இதே நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 

.