ஹர்திக் பாண்டியா முத்தமிடும் போட்டோவைப் பகிர்ந்த நதாஷா… நீக்கிய இன்ஸ்டாகிராம்… ஏன் தெரியுமா?

ஜனவரி மாதம் எங்கேஜ்மென்ட் முடிந்ததிலிருந்து இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாவில் தொடர்ந்து ரொமான்டிக் போஸ்டுகளைப் போட்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா முத்தமிடும் போட்டோவைப் பகிர்ந்த நதாஷா… நீக்கிய இன்ஸ்டாகிராம்… ஏன் தெரியுமா?

ஜூலை மாத இறுதியில் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர் ஹர்திக் - நதாஷா ஜோடி.

ஹைலைட்ஸ்

  • இன்ஸ்டா நிர்வாகம், நதாஷாவின் போஸ்டை ரிமூவ் செய்தது
  • அந்த ஸ்கிரீன்-ஷாட்டை நதாஷா பகிர்ந்திருந்தார்
  • ஹர்திக் தற்போது, ஐபிஎல் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்
New Delhi:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் வருங்கால மனைவியும் செர்பிய நடிகையுமான நதாஷா ஸ்டான்கோவிக், இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்த ஒரு போட்டோ நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எரிச்சலடைந்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா, நதாஷாவை கன்னத்தில் முத்தமிடும் படியான புகைப்படத்தைத்தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதை நீக்கிய இன்ஸ்டாகிராம் நிர்வாகம், “நாங்கள், உங்களின் இந்த போஸ்டை நீக்குகிறோம். காரணம், அது எங்களின் விதிமுறைகளுக்குப் புறம்பான வகையில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும், தவறான தகவலைத் தரக் கூடியதாகவும் உள்ளது” எனக் கூறி நதாஷாவுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்தத் தகவலை ஸ்கிரீன்-ஷாட் எடுத்த நதாஷா, இன்ஸ்டாவில் அதைப் பகிர்ந்து, “இன்ஸ்டாகிராம்… சீரியஸ்லி?!” எனக் கூறி அந்நிர்வாகத்தை டேக் செய்துள்ளார். 

நதாஷாவின் போஸ்டைப் பார்க்கவும்:

lq73t84o

நதாஷாவின் ஸ்கிரீன்-ஷாட்

ஹர்திக், தற்போது ஐபிஎல் தொடருக்காக விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் காதலியிடமிருந்து அவர் தள்ளியிருக்கிறார். இதனால் ஏக்கமடைந்த நதாஷா, “உன்னை அதற்குள் மிஸ் செய்கிறேன்” என கருத்துப் பதிய, அதற்கு ஹர்திக், “ஐ லவ் யூ” என ரிப்ளை கொடுத்து உருக வைக்கிறார். 

❤️ #alreadymissyou ???????? @hardikpandya93

A post shared by Nataša Stanković✨ (@natasastankovic__) on

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹர்திக் மற்றும் நதாஷாவுக்கு எங்கேஜ்மென்ட் முடிந்தது. ஜூலை மாத இறுதியில் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர் ஹர்திக் - நதாஷா ஜோடி. தன் குழந்தை பிறந்ததை அடுத்து ஹர்திக், நதாஷாவை டேக் செய்து, “மிகச் சிறந்த பரிசு தந்த உனக்கு நன்றி” என நெகிழ்ந்தார். 

ஜனவரி மாதம் எங்கேஜ்மென்ட் முடிந்ததிலிருந்து இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாவில் தொடர்ந்து ரொமான்டிக் போஸ்டுகளைப் போட்டு வருகின்றனர்.