This Article is From Dec 14, 2019

நூற்றுக்கணக்கில் செத்து வீழ்ந்த பறவைகள்

ஆங்கிலேசியில் குறைந்தது 300ஸ்டார்லிங்ஸ் உடலில் இரத்தக்கறையுடன் இறந்து கிடந்தன.

நூற்றுக்கணக்கில் செத்து வீழ்ந்த பறவைகள்

6 பறவைகள் வாயில் நிறைய சோளங்கள் இருந்தன

வடக்கு வேல்ஸில் நூற்றுக்கணக்கான பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. ஆங்கிலேசியில் குறைந்தது 300ஸ்டார்லிங்ஸ் உடலில் இரத்தக்கறையுடன் இறந்து கிடந்தன.  

நார்த் வேல்ஸ் லைவ் வழங்கிய செய்தியின்படி, ஹன்னா ஸ்டீவன்ஸ் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது பறவை தரையிறங்கி சாலையில் ஏதோ சாப்பிடுவது போல் தெரிந்தது போல் இருந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு பின் பறவைகள் இறந்து கிடந்துள்ளன. 

இந்த பறவைகளின் படங்களை ஹன்னா ஸ்டீவன்ஸின் நண்பர் டாஃபிட் எட்வர்ட்ஸ் எடுத்துள்ளார். “நார்ர்த் வேல்ஸ் பறவை மற்றும் வனவிலங்கு பார்வைகள்” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டன: 

225 மேலும் 100 பறவைகளும் சாலையில் காணப்பட்டன. 6 பறவைகள் வாயில் நிறைய சோளங்கள் இருந்தன. ஒருவேளை அவை விஷம் கலந்த சோளமாக இருக்காமா…? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வானத்திலிருந்து இறந்து வீழ்ந்தன என்று எட்வர்ட்ஸ் கூறுகிறார். 

பிபிசி -இன் செய்தி படி, விலங்கு மற்றும் தாவர சுகாதார நிறுவனம் பறவைகளை சோதனைக்காக சேகரித்துள்ளது. 

Click for more trending news


.