முஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது

இந்த மசோதா இந்திய அரசியலைமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்றும் அதற்கு எதிராக எங்கள் அமைப்பு மனுத்தாக்கல் செய்யும் என்று கூறினார். சட்டமன்றம் தனது பணியை நேர்மையாக செய்யவில்லை என்று குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

முஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது

இந்த மசோதா அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது பிரிவை மீறுகிறது என்றார். (File)

New Delhi:

குடியுரிமை (திருத்த) மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்று கூறிய ஜாமியத்-இ-ஹிந்த்  அமைப்பு கூறியுள்ளது. இதற்கு எதிராக புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. 

குடியுரிமை (திருத்த) மசோதா, 2019ஐ மாநிலங்களவை நிறைவேற்றிய சில நிமிடங்களிலேயே அதன் எதிர்வினை வந்தது. மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒரு “நெருக்கடி”யான ஒன்று என்று கூறியுள்ளார் ஜாமியத் -இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா அர்ஷத் மதானி. 

இந்த மசோதா இந்திய அரசியலைமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்றும் அதற்கு எதிராக எங்கள் அமைப்பு மனுத்தாக்கல் செய்யும் என்று கூறினார். சட்டமன்றம் தனது பணியை நேர்மையாக செய்யவில்லை என்று குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. 

“இப்போது நீதித்துறை இதுகுறித்து சிறந்த முடிவை எடுக்க முடியும். இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து மனு ஒன்று தயாரிக்கப்படும்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு எழும் என்று எதிர்பார்த்தோம் கெடுவாய்ப்பாக மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படுவை  சில பொறுப்பற்ற நடத்தையை வெளிப்படுத்தின” என்று கூறினார். 

இந்த மசோதா அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது பிரிவை மீறுகிறது என்றார். இந்த மசோதா நாட்டின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மசோதாவின் விளைவுகள் கண்கூடாக தெரியவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தும் போது மில்லியன் கணக்கான முஸ்லீம்களை பாதிக்கும் என்று தெரிவித்தார். 

இது இந்து - முஸ்லீம் பிரச்னையில்லை மாறாக குடிமக்களின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்னை என்று கூறியுள்ளார்

Listen to the latest songs, only on JioSaavn.com