This Article is From Nov 17, 2019

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு

“மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு

ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். (File)

New Delhi:

பாபர் மசூதி இடிப்பு -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு “மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. 

நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை. மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புகிறார்கள் என்று சட்ட வாரியம் கூறியது. 

.