ஜெய் ஸ்ரீராம் சொல்லு : முஸ்லீம் ஓட்டுநருக்கு அடி உதை

ஓட்டுநர் முஸ்லீம் என்பதை அறிந்ததும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

ஜெய் ஸ்ரீராம் சொல்லு : முஸ்லீம் ஓட்டுநருக்கு அடி உதை

இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (Representational)

Thane:

முஸ்லீம் ஓட்டுநரை அடித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வற்புறுத்திய மூன்று நபர்களை மகாராஷ்டிராவில் போலீசார் கைது செய்துள்ளனர். ஐபிசி பிரிவு 295 (மத உணர்வுகளை புண்படுத்தும்) மற்றும் 392 (கொள்ளை) ஆகியவற்றின் கீழ் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

புகாரில் ஃபைசல் என்ற வாகன ஓட்டுநர் சனிக்கிழமை இரவு திவா நகரத்திற்கு சில பயணிகளை அழைத்துச் சென்றுள்ளார். திரும்பி வரும் போது ஐந்து ஆண்களுடன் சண்டையிட்டுள்ளார். அவர்கள் ஓட்டுநர் ஃபைசலை அடித்து உதைத்துள்ளனர். ஓட்டுநர் முஸ்லீம் என்பதை அறிந்ததும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். 

தற்போது இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரில் உள்ள பிறரை கைது செய்ய தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஏதும் வெளிப்படுத்தவில்லை.