This Article is From Nov 17, 2019

முரசொலி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்

இந்த புகாரின் பேரில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முரசொலி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்

பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகாரளித்தார்.

முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்' திரைப்படத்தை பார்த்து விட்டு பஞ்சமி நிலம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். இதனை குறிப்பிட்டு ‘முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது' என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார். 

திமுக தலைவர் ஸ்டாலினும் ‘முரசொலி பத்திரிக்கையுள்ள நிலத்தின் பத்திரத்தை வெளியிட்டு அன்புமணி அரசியலிருந்து வெளியேற தயாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகாரளித்தார். 

இந்த புகாரின் பேரில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

.