மும்பையில் வயாகரா தருவதாக கூறி அமெரிக்கர்களை ஏமாற்றிய 8 பேர் கைது

கால் சென்டர் மூலமாக அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மும்பையில் வயாகரா தருவதாக கூறி அமெரிக்கர்களை ஏமாற்றிய 8 பேர் கைது

கைதான 8 பேரிடம் இருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Mumbai: 

மும்பையில் 8 பேர் கொண்ட மோசடி கும்பல் தடை செய்யப்பட்ட போதைப் பொருள், வயாகரா உள்ளிட்டவற்றை தருவதாக கூறி அமெரிக்கர்களை ஏமாற்றியுள்ளது. அந்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை கால் சென்டர் மூலமாக இந்த கும்பல் முதலில் தொடர்பு கொள்ளும். போன் அழைப்புகள் அனைத்தும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோடோகால் எனப்படும் நெட் கால்கள் மூலம் அழைக்கப்படும்.

வயாகரா, போதைப் பொருள் தருவதாக கூறி ஆசை காட்டிய பின்னர், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அதனை வாங்க சம்மதித்தால், டாலரில் தொகையை அளிக்குமாறு இந்த கும்பல் கூறும்.

இதில் ஏமாறுபவர்கள் அந்த கும்பலுக்கு பணத்தை நெட்டில் பணத்தை அளித்துள்ளனர். இதன்பின்னர் மோசடி கும்பலை யாரும் தொடர்பு கொள்ள முடியாது. இது தொடர்பான புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மும்பை போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.

புறநகர் பகுதியான குர்லாவில் இந்த கும்பல் செயல்பட்டு வந்தது. கைதான 8 பேரிடம் இருந்து லேப்டாப், 11 ஹார்ட் டிஸ்குகள், மொபைல் ஃபோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................