This Article is From Jul 02, 2019

கனமழை எதிரொலி: பொதுமக்கள் வீட்டிலே இருக்க மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தல்!

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் வைத்தே பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கனமழை எதிரொலி: பொதுமக்கள் வீட்டிலே இருக்க மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தல்!

Mumbai rain: வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் பட்னாவிஸ்.

Mumbai:

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரம் முழுவதும் முடங்கி காணப்படுகிறது. இதனால், புறநகர் ரயில்களை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மகராஷ்டிரா அரசு இன்று நகரில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிறுக்கிழமை முதல் தற்போது வரை மட்டும் 540 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 10 வருடங்களில் இல்லாத பெரும் மழைப்பதிவாகும்.

தானே மற்றும் மும்பைக்கு இன்று பொதுவிடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் வைத்தே பணி செய்ய வலியுறுத்தியுள்ளது. அவசர காரணங்களை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர மும்பையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இன்றும் மூடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, மழை பெய்த குர்லா பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்தியக் கடற்படை பல குழுக்களை அனுப்பியுள்ளது.

மேலும் மும்பை விமான நிலையத்தின் ஓடுதள பாதையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 24 முதல் 28 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் தரையிறங்குவதாக இருந்த 54 விமானங்கள் அகமதாபாத், கோவா மற்றும் பெங்களூருவுக்கு திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தின் பிரதான ரன்-வே நேற்றிரவு மூடப்பட்டது. தற்போதைக்கு ரன்வே ஒன்று மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

.