எம்.பி.ஏ., பட்டதாரி தம்பதிகளின் சாலையோர உணவகம்! நெகிழ்ச்சி காரணம்..குவியும் பாராட்டுகள்!

இந்த தம்பதியனருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எம்.பி.ஏ., பட்டதாரி தம்பதிகளின் சாலையோர உணவகம்! நெகிழ்ச்சி காரணம்..குவியும் பாராட்டுகள்!

நெகிழ்ச்சியான காரணத்திற்காக மும்பையில் பட்டதாரி தம்பதிகள் தினமும் காலையில் சாலையோர உணவகத்தை நடத்தி வருகின்றனர்.


மும்பையின் கண்டவாலி ரயில்நிலையத்திற்கு வெளியில், தினமும் காலையில் தம்பதியினர் ஒருவர் சாலையோர உணவுக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். காலை 4 மணி முதல் 10 மணி வரை இந்த உணவகத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். 

இதில், என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? இவர்கள் இருவருமே நன்கு படித்து, நல்ல பணியில் இருப்பவர்கள். இருப்பினும், தினமும் காலையில், இவர்கள் இந்த சாலையோர உணவகத்தை நடத்தி வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஒரு முகநூல் பதிவு விரிவாக விளக்குகிறது. 

இதுகுறித்து தீபாலி பாத்தியா என்பவர் தனது முகநூலில் விரிவாக எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

காந்தி ஜெயந்தி அன்று பாத்தியா நல்ல உணவு தேடி சாலைகளை சுற்றி வந்துள்ளார். அப்போது, அவரது கண்ணில் இந்த தம்பதியினரின் சாலையோர உணவுக்கடை சிக்கியுள்ளது. அஸ்வினி சேனாய் ஷா மற்றும் அவரது கணவர் அந்த சிற்றுண்டி கடையை நடத்தி வந்துள்ளனர். 

அந்த கடையில், போகா, உப்மா, பரந்தாஸ், இட்லி உள்ளிட்ட உணவுகள் கிடைக்கின்றன. அவர்களின் உணவுகள் அனைத்தையும் ரூசி பார்த்த பாத்தியா, அவர்களிடம் எதற்காக சாலையோரத்தில் கடை போட்டு நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பி தம்பதியனரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். 

அப்போது, அவர்களிடம் இருந்து வந்த பதில், பாத்தியாவை மிகவும் நெகிழச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தம்பதியனரின் 55 வயதான வீட்டுப் பணிப்பெண்ணிற்கு உதவுவதற்காகவே, தினமும் காலையில் இந்த சாலையோர சிற்றுண்டியை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பக்கவாதத்தால் முடங்கிய அந்த பணிப்பெண்ணின் கணவர் சமைத்து தரும் உணவுகளையே அஸ்வினி சேனாய் ஷா மற்றும் அவரது கணவர் விற்பனை செய்து வருகின்றனர். 

அந்த தம்பதியினரை சூப்பர் ஹீரோக்களாக குறிப்பிட்டு புகழ்ந்த பாத்தியா, தங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு உதவுவதற்காக இவர்கள் வேலை செய்வதால், அந்த பணிப்பெண்ணின் பெருளாதார சுமை சற்று குறையும், இந்த வயதில் அவர் பணத்திற்காக ஒட வேண்டிய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

பாத்தியாவின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 12,000 லைக்குகள் குவிந்தன. சிலருக்கு உதவ வேண்டும் என்பதற்காக தங்களது நேரத்தை ஒதுக்கி வேலை செய்யும் தம்பதியனரை பாராட்டி, நூற்றுக்கணக்கான கமெண்டுகளும் குவிந்தன.

அதில் ஒருவர், 'நம்மால் பணத்தை கொடுத்து உதவ முடியாவிட்டாலும், இதுபோன்று நேரத்தை செலவலித்து உதவலாம்' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................