நாயை காப்பாற்றியதால் தன் தம்பியை கொன்ற நபர்!

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹனுமந்தா அங்குள்ள நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். பின் அவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாயை காப்பாற்றியதால் தன் தம்பியை கொன்ற நபர்!
Mumbai: 

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பக்கத்து வீட்டு நாயை காப்பாற்ற சென்றதால் தனது தம்பியை அடித்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

ஹானுமந்தா கோலீகார் என்னும் 50 வயது நபர், தனது தம்பியான சிவா கோலீகாரை கொலை செய்த கொடூரம் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதற்கு  சிவா பக்கத்து  வீட்டாரின் நாய் குட்டியை காப்பாற்றியதுதான் காரணமாக கூறப்படுகிறது. 

பக்கத்து வீட்டு நாயைத் தாக்க சென்ற ஹனுந்தாவை, சிவா தடுத்ததால் ஆத்திரமடைந்த ஹானுமந்தா, தன் தம்பி சிவாவை மாடியிலிருந்து கீழே தள்ளி தாக்கினார். இதனால் பலத்த காயங்கள் அடைந்த சிவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹனுமந்தா அங்குள்ள நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். பின் அவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................