மும்பையில் ரூ. 1.7 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை வைத்திருந்த நபர் கைது

ஆம்பர் வெப்பமண்டல கடல் பகுதிகளில் கிடைக்கிறது. இதைப் வாசனை திரவியம் உற்பத்திக்கு பயன்படுத்துவார்கள்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மும்பையில் ரூ. 1.7 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை வைத்திருந்த நபர் கைது

1.3 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது (FILE PHOTO)


Mumbai: 

மும்பையில் 53 வயதானவரிடமிருந்து 1.3 கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 1.7 கோடி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பர்கிரிஸ் என்பது திமிங்கலத்தின் எச்சமாகும். சுறாமீனின் குடலில் சேமிக்காத மிச்ச உணவுகள் அம்பர்கிரிஸ் என்ற திரவம் மூலம் ஒன்றினைக்கப்படுகிறது.இதை திமிங்கலம் வாந்தியாக எடுத்துவிடுகிறது. இந்த ஆம்பர் வெப்பமண்டல கடல் பகுதிகளில் கிடைக்கிறது. இதைப்  வாசனை திரவியம் உற்பத்திக்கு பயன்படுத்துவார்கள்.

காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கூட்டுக்குழு சனிக்கிழமை புறநகரான வித்யாவிஹார் பகுதியில் ராகுல் டுபாரேவை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

வனவிலங்கு சட்டத்தின் கீழ் திமிங்கலத்தின் எச்சம் பாதுகாக்கப்பட்டுள்ள ஒன்றாக கருதப்படுகிறது. ஆம்பர்கிரிஸ் ஆல்கஹால், குளோரோஃபார்மில் கரையக்கூடியது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................