மும்பையை கலக்கிய 'அண்டர்வேல்டு டான்' ரவி புஜாரி கைது

நடிகர்களை கடத்துவதில் ரவி புஜாரி கில்லாடியாக இருந்துள்ளார். ரவி புஜாரிக்கு கேங்ஸ்டர் சோட்டா ராஜன் குருவாக செயல்பட்டார். சோட்டா ராஜன் தற்போது நவி மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மும்பையை கலக்கிய 'அண்டர்வேல்டு டான்' ரவி புஜாரி கைது

நடிகர்களை கடத்துவதில் ரவி புஜாரி கில்லாடியாக இருந்துள்ளார்.

New Delhi:

'அண்டர் வேல்டு டான்' ரவி புஜாரி செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1990-களில் ரவி புஜாரி மும்பையை கலக்கி வந்தார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட புஜாரி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஆஸ்திரேலியாவில் பதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் அவர் செனகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டான் சோட்ட ராஜனை பார்த்து, அவரை குருவாக ஏற்றுக் கொண்டவர் ரவி புஜாரி. பாலிவுட் பிரபலங்களை கடந்த 2009-2013 கால கட்டத்தில் கடத்தி, பணம் பறிப்பதை ரவி புஜாரி வழக்கமாக கொண்டிருந்தார். 

புஜாரியின் கேங்கில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து நாடு கடத்துதல் சட்டம் மூலமாக இந்தியா கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மும்பையில் டானாக இருந்த ரவி புஜாரி நெருக்கடிகள் காரணமாக தனது தளத்தை பெங்களூருவுக்கு மாற்றியதாக போலீஸ் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு ஜவகர்லால் பல்கலை கழக மாணவர் உமர் காலித், செயற்பாட்டாளர் ஸ்னேகா ரஷித், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் ரவி புஜாரியிடம் இருந்து கொலை மிரட்டல்களை பெற்றுள்ளனர்.