This Article is From Jan 07, 2020

ஜேஎன்யூ தாக்குதலுக்கு எதிர்ப்பு: மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்!

'Occupy Gateway': ஜேஎன்யூ மாணவர்கள் மீதான முகமூடி கும்பல் தாக்குதலை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு மும்பை பகுதியில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் மாணவர்கள் கூட்டம் கூடியது.

'Occupy Gateway': ஜேஎன்யூ தாக்குதலை கண்டித்து மும்பை மாணவர்கள் போராட்டம்

ஹைலைட்ஸ்

  • Protesters forced out by the police this morning, moved to Azad Maidan
  • Policemen came in large numbers, physically dragged away protesters
  • It was becoming a challenge to control the crowd, said police
Mumbai:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பல் தாக்குதலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கேட்வே ஆஃப் இந்தியாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை ஆர்பாட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார் அவர்களை அங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஆசாத் மைதானத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். 

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கேட்வே ஆஃப் இந்தியாவில் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லை என்றும் மும்பையில் மிகவும் பரபரப்பான தளங்களில் ஒன்றான கேட்வேயில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கு ஒரு சவாலாகி வருவதாகவும் அவர் கூறினார். 

மும்பை காவல்துறை சார்பாக நாங்கள் அவர்களிடம் இரண்டு மூன்று முறை முறையிட்டோம். நாங்கள் அவ்வப்போது அமைதியாக இருக்குமாறு அவர்களிடம் முறையிட்டோம், ஆனால் அவர்களால் சாலைகள் முடங்கின. 

இதனால், மும்பைக்காரர்கள் கடமையாக அவதியடைந்தனர். மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறினார். வலியுறுத்தினார்.

ஜேஎன்யூ மாணவர்கள் மீதான முகமூடி கும்பல் தாக்குதலை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு மும்பை பகுதியில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் மாணவர்கள் கூட்டம் கூடியது. 
 

52668r1g

"Occupy Gateway": போராட்டக்கார ர்கள் மும்பை ஆசாத் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

ஜேஎன்யூவின் முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் குணல் காம்ரா உள்ளிட்டோரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மெழுவர்த்தி பேரணியில் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு திரைப்பிரபலங்கள், மற்றும் பிற முக்கியஸ்தர்களும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். 

மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்து சமூகவலைதளங்கில் வைரலாக பரவி வரும் வீடியோவில், மாணவர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்புகின்றனர். தொடர்ந்து, கையில் தேசிய கொடியுடன் தங்களது எதிர்ப்பை பாடலாகவும் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெரும்பாலும், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக கடும் கோஷங்கள் எழுப்பினர். 

.