பேய்க் குழந்தை என்று அலறிய தாய் : அப்பாடா… இதுதான் காரணமா…!

இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கை விரிப்பை மாற்றியுள்ளார். ஆனால், மேட்ரஸை வைக்க மறந்துள்ளார்

பேய்க் குழந்தை என்று அலறிய தாய் : அப்பாடா… இதுதான் காரணமா…!

மரிட்ஸா சிபுல்ஸ் தனது மகனுக்கு பக்கத்தில் ‘பேய் குழந்தை’ ஒன்று படுத்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

அமெரிக்காவில் இல்லினாய்ஸைச் சேர்ந்த பெண்ணொருவர் மரிட்ஸா சிபுல்ஸ் தனது மகனுக்கு பக்கத்தில் ‘பேய் குழந்தை' ஒன்று படுத்துள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தன்னுடைய 18 மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பின் மானிட்டரை பார்த்த போது தன் குழந்தையின் பக்கத்தில் மற்றொரு உருவம் ஒன்று படுத்திருப்பதை  பார்த்துள்ளார். தான் பார்த்த உருவத்தை புகைப்படத்திலும் பதிவு செய்துள்ளார். மரிட்ஸாவிற்கு பேய்களின் மீது நம்பிக்கை இல்லையென்றாலும் தன் கண்ணால் கண்டதை அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெகுவாக பரவியது. 2.9 லட்சத்திற்கும் அதிகமாக ஷேர் செய்துள்ளனர். 5 லட்சம் கமெண்டுகளுடன் வைரலாகியிருந்தது.  பின் இந்த விஷயத்திற்கும் தர்க்க ரீதியான விளக்கம் இருந்தது.  

மறுநாள் காலையில் தன் மகனின் அறைக்கு சென்று சந்தேகத்தை தீர்த்துக் கொண்டார். ‘பேய் குழந்தை' என்று நினைத்தது மெத்தையில் இருந்த வடிவமைப்பை பார்த்துத்தான். மெத்தைக்கு மேல் வைக்க வேண்டிய மேட்ரஸை கணவர் வைக்க மறந்துள்ளார். இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கை விரிப்பை மாற்றியுள்ளார். ஆனால், மேட்ரஸை வைக்க மறந்துள்ளார். இதை பேஸ்புக்கில் எழுதி சிரிக்கும் முகம் எமோஜிகளை சேர்த்துள்ளார். 

Click for more trending news


More News