முகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
முகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.


ஹைலைட்ஸ்

  1. முகிலன் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார்
  2. காவல் துறை மீது பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்
  3. முகிலன், சுற்றுச்சூழலை காக்க தொடர்ந்து போராடி வந்தவர் ஆவார்

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். அவர் கடந்த 16 ஆம் தேதி முதல் யாருடைய தொடர்பிலும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 15 ஆம் தேதி, காலை 11:00 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், 2018 மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், “கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?” என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு எப்படி நடத்தப்பட்டது? ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன? என்பதை அம்பலப்படுத்தும் வகையில் அந்த ஆவணப்படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே முகிலன் கூறியிருந்தார்.

இதையடுத்து 16 ஆம் தேதி அதிகாலை முதல் அவர் காணாமல் போயுள்ளார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, தமிழக போலீஸ் தரப்பே முகிலனை சட்டத்துக்கு விரோதமாக கைது செய்து வைத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், முகிலன் காவல்துறையால் கடத்தப்பட்டு 3 நாட்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி ஆட்கொணர்வு மனு சில நாட்களுக்கு முன்னர் செய்யப்பட்டது. அந்த மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிமன்றம், ‘சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் விசாரணை அறிக்கையை வரும் மார்ச் 4 ஆம் தேதி, காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது.

 

மேலும்  படிக்க : காணாமல் போன செயற்பாட்டாளர் முகிலன்… பகீர் பின்னணி..!
 



லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................