This Article is From Aug 16, 2018

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்!

நிகழ்ச்சியின் போது, தமிழக அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அடுத்ததாகத்தான், நீதிபதிகளுக்கு அமருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று அளித்து தேநீர் விருந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பாலானோர் புறக்கணித்தனர். இது அரசு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து, தஹில ரமானி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, தமிழக அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அடுத்ததாகத்தான், நீதிபதிகளுக்கு அமருவதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், நீதிபதிகள் பலர் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று தேநீர் விருந்துக்கு முதல்வர், நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார். முன்னர் கொடுக்கப்பட்ட ‘அவமரியாதை’-க்காக இந்த தேநீர் விருந்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் பங்கேற்கவில்லை. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.