This Article is From Jun 25, 2020

சீன எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!!

ஏப்ரல் 30, 2020 அன்றைக்கு முன்பு எல்லையில் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என்று இந்தியா  தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வான், கோங்கா லா, பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை இந்தியா இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சீன எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!!

கல்வான் அருகே சீனா புதிதாக கட்டிடங்களை கட்டி வருவதை உறுதி செய்யும், செயற்கைகோள் படங்கள் NDTVயில் வெளியிடப்பட்டுள்ளன. 

New Delhi:

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா - சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் தூரத்தில் எல்லை அமைந்துள்ளது. இதன் பல்வேறு பகுதிகளில் சீனா தொடர்ந்து  அத்து மீறி வருகிறது. இதனை  முடிவுக்கு  கொண்டு வருவதற்காக மத்திய அரசு  உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக இந்திய ராணுவம் மட்டுமல்லாமல் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையும் பணியில் அமர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் துணை  தளபதி பரம்ஜித்  சிங்கும், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு  படையின் தலைவர் எஸ்.எஸ். தேஸ்வாலும் லே பகுதியில் ஆய்வு  நடத்தினர். இதன் அடிப்படையில் எல்லையில் படைகளை குவிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக எல்லை பகுயில் ப்ளாட்டூன் எனப்படும் படைப்பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும்.  இதில் 30 வீரர்கள் இருப்பார்கள். அதற்கு பதிலாக கம்பெனி படைகளை நிறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  சுமார் 100 வீரர்களை கொண்டதாக கம்பெனி படை இருக்கும். 

இந்தியா - சீனா இடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்ற ஜூன் 15-ம் தேதியில் இருந்து  கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஏரிப் பகுதியின் பதற்றம் இன்னும் நீடிப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஏப்ரல் 30, 2020 அன்றைக்கு முன்பு எல்லையில் எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் நீடிக்க வேண்டும் என்று இந்தியா  தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வான், கோங்கா லா, பாங்காங் ஏரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை இந்தியா இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்வான் அருகே சீனா புதிதாக கட்டிடங்களை கட்டி வருவதை உறுதி செய்யும், செயற்கைகோள் படங்கள் NDTVயில் வெளியிடப்பட்டுள்ளன. 

கோங்கா லா பகுதியிலும் புதிதாக ஒரு  மாதத்திற்கும் மேலாக சீன கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. ரோந்து முனை 17 எனப்படும் இருநாட்டு வீரர்கள் மோதிக் கொண்ட பகுதியில் சீனா பல நாட்களாக  படைகளை தங்க வைத்திருந்தது. 

பாங்காங் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த சீன படைகள் தற்போது ஃபிங்கர் 4 எனப்படும் சிரிஜாப் மலைத் தொடரை தாண்டி சென்று விட்டதாகவும் அவர்களிடம் 120க்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் டஜன் கணக்கில் படகுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எல்லைக் கோடு பகுதியில் சீனா தொடர்ந்து  அத்துமீறி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. 

குறிப்பாக  அங்கு புதிதாக கட்டிடங்கள், சாலைகள்  அமைக்கும் பணியை மேற்கொள்கிறது. இந்த  விவகாரங்களை மத்திய அரசு  ராணுவ ரீதியிலும்,  தூதரகத்தின்  மூலமாகவும் எதிர்கொண்டு வருகிறது.  டோக்லாமில் 73 நாட்கள் தொடர் முயற்சிக்கு பின்னர், சீன ராணுவத்தை இந்தியா விரட்டியது. இந்த நிலையில்,  கல்வான் பிரச்னை  தீர்வதற்கு டோக்லானை விட கூடுதலாக சில நாட்களாகும் என ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

.