கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது

சிறையில் போதிய இடம் இல்லாததால் 1,500-க்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராகபோராட்டம் நடந்து வருகிறது

Kochi:

சபரி மலையில் பெண்கள் நுழைவதை தடுக்கும் வகையில் கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் சுமார் 2 ஆயிரம்பேரை போலீசார் கடந்த 2 நாட்களில் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் 700-க்கும் அதிகமானவர்கள் பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாக்குளம் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், சபரி மலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து போராடியர்கள் 2,061 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2,300 பேர் மீது 452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறையில் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1,500 பேருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விவகாரத்தை பினராயி விஜயன் சரியாக கையாளவில்லை என்றும், அவர் சபரி மலையை போர்க்களமாக மாற்றி வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார்.