''அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்'' - ஓ.பி.எஸ். தகவல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் ஜி.கே. வாசனின் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும்'' - ஓ.பி.எஸ். தகவல்

தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


ஹைலைட்ஸ்

  1. அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது
  2. அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வாய்ப்பு
  3. ஓரிரு நாட்களில் கூட்டணி இறுதி செய்யப்படலாம்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வரும் நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியிருப்பது தேமுதிக அதிமுக கூட்டணியில் விரைவில் சேரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, 2 கம்யூனிஸிட் கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக தரப்பில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. 

இந்த நிலையில், கூட்டணி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், ''வரவிருவிருக்கும் மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று கூறியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................