கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு வழிவகுத்து நாட்டில் ஒரு நீர்நிலை நெருக்கடி தொடர்ந்து வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியுள்ளது.


Thiruvananthapuram: 

தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கேரளாவில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அரபிக்கடலில் கடந்த ஒன்றாம் தேதி மழைப்பொழிவு தொடங்கியது. அப்போதிருந்தே கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், மற்றும் திருவனந்தபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும்.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 6 நாட்கள் தாமதமாக 6ம் தேதி தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மேலும் 2 நாட்கள் தாமதமாக 8ம் தேதி தான் பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் கேரளாவில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த வருடம் வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை தவறாமல் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் துவங்கி செப்டம்பர் வரை சராசரியாக இந்த 4 மாதங்களில், 203 சென்டி மீட்டர் மழை பெய்யும்.

இதனிடையே தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................