மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பர்: அமித்ஷா

வாரத்தில் 6 நாட்களுக்கு 6 பேர் பிரதமராக இருப்பார்கள் என்று அவர்களின் பெயர்களை பட்டியலிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஞாயிறன்று ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும்

 Share
EMAIL
PRINT
COMMENTS

இந்த மாதம் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.


Kanpur: 

ஹைலைட்ஸ்

  1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பர்.
  2. அவர்களில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது யாருக்கும் தெரியாது.
  3. ஞாயிறன்று ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும்.

மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பர் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது, நாங்கள் எங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களது வேட்பாளர் நரேந்திர மோடியே.. உங்களின் நிலை என்ன? உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? என கேள்வி எழுப்பினார்.

மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பர். திங்கள் மாயாவதி, செவ்வாய் அகிலேஷ் யாதவ், புதன் மம்தா பானர்ஜி, வியாழன் சரத்பவார், வெள்ளி தேவ கவுடா, சனி ஸ்டாலின் என ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார்கள் என்றார்.

இப்படி வாரத்தில் 6 நாட்களுக்கு 6 பேர் பிரதமராக இருப்பார்கள் என்று அவர்களின் பெயர்களை பட்டியலிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஞாயிறன்று ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும் என்று தெரிவித்ததார்.

மேலும், மெகா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி கூட்டணி நாட்டை முன்னேற்றாது. 56 இன்ச் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் என்று அவர் கூறினார்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................