செக் மோசடி வழக்கு: பிரபல நடிகருக்கு 1 வருட சிறை தண்டனை!

தெலுங்கு இயக்குநர் ஒய்.வி.எஸ் செளத்ரி தொடர்ந்த வழக்கில் 23வது சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரூ.41.75 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
செக் மோசடி வழக்கு: பிரபல நடிகருக்கு 1 வருட சிறை தண்டனை!

மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Hyderabad: 

செக் மோசடி வழக்கில் பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் ஒய்.வி.எஸ் செளத்ரி தொடர்ந்த வழக்கில் 23வது சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரூ.41.75 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, இயக்குநர் செளத்திரியின் வழக்கறிஞர் சத்ய சாய்பாபா கூறும்போது, மோகன்பாபுவின் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனம் தரப்பிலும் ரூ.10,000 அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

'தேவதாசு' திரைப்பட புகழ் இயக்குநர் செளத்ரி, மோகன் பாபு தயாரிப்பு நிறுவனத்திற்கு கீழ் இயக்கிய சலீம் திரைப்படம் கடந்த 2009ல் வெளியானது. இந்த படத்திற்கு சம்பளமாக ஒரு கோடியே 60 லட்சம் இயக்குநர் செளத்ரிக்கு பேசப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனம் சார்பில் பேசிய பணத்தை தராமல் அவர் கையில் ஒரு கோடியே 10 லட்சம் மட்டும் தரப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ள தொகை ரூ.40லட்சத்தி 50 ஆயிரத்திற்கு மோகன்பாபு செக் வழங்கியுள்ளார். ஆனால், இந்த செக்கை வங்கியில் செலுத்தியது போது கணக்கில் போதிய பணம் இல்லை என செக் ரிட்டன் ஆகியுள்ளது.

இதைத்தொடர்ந்தே, செளத்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், அவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதமே மோகன் பாபு ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................