This Article is From Feb 27, 2019

மோடியின் சென்னை வருகை தமிழகத்தில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகை தமிழத்தில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மோடியின் சென்னை வருகை தமிழகத்தில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: தமிழிசை

மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் 6ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பிரதமர் மோடியின் சென்னை வருகை, தமிழகத்தில் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கமல்ஹாசன் எத்தனை பேரை சந்தித்தாலும், மக்கள் சிந்தித்து தான் வாக்களிப்பார்கள்.

ஏழை விவசாயிகளை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத எதிர்கட்சியினர் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்வதை கொச்சை படுத்தினால் இந்திய விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

.