This Article is From Feb 17, 2019

‘’நெஞ்சு நெருப்பாய் கொதிக்கிறது–ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதிலடி’’–அனலை கக்கிய மோடி

லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், துணை ராணுவத்தினர் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜகவை மற்ற அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

ஹைலைட்ஸ்

  • கடும் நடவடிக்கை எடுக்க பாஜகவை கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகின்றன
  • ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கு பழிதீர்க்க வேண்டும் என்கிறார் பாஸ்வான்
  • நெஞ்சு நெருப்பாய் கொதிப்பதாக மோடி கூறியுள்ளார்
New Delhi:

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய மோடி, ‘'நாட்டு மக்களின் நெஞ்சம் எப்படி கொதிக்கிறதோ, அதேபோன்றுதான் என் நெஞ்சத்தில் நெருப்பு பற்றியுள்ளது'' என்று அனல் தெறிக்க பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த வியாழன் அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தமிழக வீரர்கள் சிவச்சந்திரன், சுப்ரமணியன் உள்பட 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதனால் பாஜக அரசு சற்று அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் இன்று பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், துணை ராணுவத்தினர் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

286emiegதீவிரவாத தாக்குதல் நடந்த இடம்

இதையடுத்து மைக்கை பிடித்த மோடி தனக்கு முன்னால் கூடியிருந்த மக்களைப் பார்த்த, ‘'40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைப் பார்த்து உங்கள் மனம் எப்படி கொதிக்கிறதோ அதே கொதிப்புதான் என் நெஞ்சத்திலும் இருக்கிறது'' என்றார். இதனால் விரைவில் தகுந்த பதிலடி ராணுவம் தரப்பில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த மோடி, வீரர்களின் தியாகம் வீண்போகாது என்றார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், கொடூரத்தனமான செயலுக்கு மறக்க முடியாத பாடத்தை தீவிரவாதிகளுக்கு கற்றுக் கொடுப்போம் என்று கூறினார்.

முதலில் வர்த்தக ரீதியில் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்க வரி விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை இதுவரைக்கும் 40 நாடுகள் கண்டித்துள்ளன. இந்தியாவுக்கு இது முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

இன்றைக்கு ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

.