சிகாகோவில் நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலகில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்து தத்துவத்தில் தீர்வு உள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிகாகோவில் நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
Chicago: 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் நடைப்பெற்று வருகிறது

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்கள் சிகாகோ சென்றுள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “சுவாமி விவேகானந்தரின் உரையை கொண்டாடும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சுவாமி விவேகானந்தரை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார்கள். உலகில் உள்ள முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள் இந்த மாநாட்டின் மூலம் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்

மேலும், “உலகில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு இந்து தத்துவத்தில் தீர்வு உள்ளது. முன்னேற்றம் வளர்ச்சி கண்டுள்ள இந்த காலத்தில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்து எண்ணம் கொண்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும்” என்றார்.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................