This Article is From Nov 18, 2018

கடவுள் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர் - பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங் பேச்சு

பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங், இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் அதிகாரத்தில் இருந்தும் ராமர் கோவிலை கட்டவில்லை

கடவுள் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவர் - பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங் பேச்சு

இனியும் ராமர் கோவிலைக் கட்ட காலதாமதம் செய்யக்கூடாது

Ballia, Uttar Pradesh:

பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர சிங், இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் அதிகாரத்தில் இருந்தும் ராமர் கோவிலை கட்டவில்லை என்று பிரதமர் மோடிமீதும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் மீதும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நேற்று பத்திரிகையாளார்களை சந்தித்த சுரேந்தர சிங் “இந்துத்துவத்தை ஆதரிக்கும் மோடி ஜி பிரதமராகவும், யோகி ஜி முதலமைச்சராகக் கிடைத்தும் இந்து மத கடவுள் ராம் பகவான் இன்றளவும் கூடாரத்தில்தான் இருக்கிறார். என்று பேசியுள்ளார். மேலும், இந்தியாவிற்கும் இந்து மத சமுதாயத்திற்கும் இது மிகவும் துரதிஷ்டவசமானது, ராமர் கோவிலை கட்டுவதற்கான சூழலை நிச்சயமாக இவர்கள் உருவாக்க வேண்டும் இதற்கு மேல் காலதாமதம் செய்யக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், “கடவுள் அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அதனால் காலதாமதம் ஏதுமின்றி அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா கடந்த நவம்பர் 12-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் ராமர் விரும்பும்போது கட்டப்படும் என்றும் அனைத்து செயல்களும் இறைவனால் மட்டுமே நடக்கிறது. எனத் தெரிவித்திருந்தார்.

எம்.எல்.ஏ சுரேந்திர சிங்கின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

.