''மோடி வெறும் விளம்பரம்தான்; வேலை ஒன்றும் செய்யவில்லை'' - சந்திரபாபு நாயுடு

பப்ளிசிட்டி பிரியராக மோடி இருக்கிறார்; ஆனால் அவரிடா பர்ஃபார்மென்ஸ் ஏதும் இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''மோடி வெறும் விளம்பரம்தான்; வேலை ஒன்றும் செய்யவில்லை'' - சந்திரபாபு நாயுடு

கொல்கத்தாவில் மம்தா நடத்திய மாநாட்டில் பேசும் சந்திரபாபு நாயுடு


Kolkata: 

மோடி வெற்று விளம்பரம்தான் செய்கிறார். வேலை ஒன்றும் செய்யவில்லை என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் பாஜக எதிர்ப்பு மாநாட்டை அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார். இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


அவர்கள் ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து பாஜகவை விமர்சித்தும், அக்கட்சியை ஆட்சியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பேசி வருகின்றனர்.


மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது-


பிரதமர் நரேந்திர மோடி விளம்பரப் பிரியராக இருந்து வருகிறார். ஆனால் வேலை ஒன்றும் செய்யவில்லை. நமக்கு செயல்படக்கூடிய பிரதமர்தான் தேவை.


5 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜகவுக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தந்தார்கள். ஆனால் நாட்டுக்கு பாஜக துரோகம் செய்த விட்டது. ஸ்மார்ட் சிட்டி, நல்ல நிர்வாகம், நல்ல நாள், 2 கோடி வேலை வாய்ப்பு என்று பாஜகவினர் பேசினர். அவை அனைத்தும் பேச்சோடு நின்று விட்டது. 


இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................