‘மோடி, சந்திரசேகர், ஒவைசி மூவரும் ஒன்றுதான்!’- ராகுல் பரபர

தெலங்கானா சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி, நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘மோடி, சந்திரசேகர், ஒவைசி மூவரும் ஒன்றுதான்!’- ராகுல் பரபர

தெலங்கானா சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி, நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், ஏஐம்ஐம் தலைவர் அசதுதீன் ஒவைசி ஆகிய மூவரும் ஓரே அணி தான் என்றும் அவர்களை நம்பி தெலங்கானா மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது எனவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் தெலங்கானா ராஷ்டிர சமதி கட்சி, பாஜக-வின் இரண்டாம் அணி என்றும் அதன் தலைவர் சந்திரசேகர் ராவ் மோடியின் தெலங்கானாவிற்கான ரப்பர் ஸ்டாம்ப் என்றும் ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த ட்வீட்டில், ஏஐம்ஐம் கட்சியானது பிஜேபிக்கு எதிராக உள்ள வாக்குகளை சிதற வைக்கவே பிஜேபின் மூன்றாவது அணியாக செயல்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘தெலங்கானா மாநிலமானது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உருவானதாகும். தெலங்கானா மாநிலம் பல கனவுகளாலும் முன்னேற்றக் கருத்தாலும் உதயமானது. அதனை டிஆர்எஸ்/பிஜேபி-யின் ஊழலாலும் செயலற்ற நிர்வாகத்தாலும் மக்கள், அவர்கள் ஆட்சியை குறைக்கூற வைத்துள்ளது' என்றுள்ளார் ராகுல்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................