ஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்!

M.K.Stalin on Murasoli Issue- “பொய்யையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபரம் நடத்தி வரும் மருத்துவர் ராமதாஸ்..."

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்!

M.K.Stalin on Murasoli Issue- "ராமதாஸின் கைப்பாவையாக செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்"


M.K.Stalin on Murasoli Issue- திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) அதிகாரபூர்வ நாளிதழான, ‘முரசொலி' (Murasoli) அலுவலகம் இருக்குமிடம், ஒரு பஞ்சமி நிலம் என்று குற்றச்சாட்டை சில நாட்களுக்கு முன்னர் முன் வைத்தார் பாமக-வின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் (Ramadoss). இதை அப்போதே மறுத்து கண்டனம் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin). தற்போது பாஜக-வும் திமுக-வுக்கு எதிராக புகார் கொடுத்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் எதிராக பொங்கியுள்ளார் ஸ்டாலின். 

“பொய்யையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபரம் நடத்தி வரும் மருத்துவர் ராமதாஸ், திடீரென கற்பனையான ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது ‘முரசொலி' அலுவலகம் இருக்கமிடம் ‘பஞ்சமி' நிலம் என ஒரு செய்தி வெளியிட்டார். அது ‘பஞ்சமி' நிலமல்ல; ‘பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு, அது பஞ்சமி நிலமென்பதை ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்; அப்படி நிரூபிக்காவிடில் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என நான் அறைகூவல் விடுத்திருந்தேன். அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றப்படவில்லை.

இப்போது, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, அது செய்தியாக ஊடகங்களில் வருகிறது. ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன்.

அவருக்காக அனுதாபப்படுகிறேன். ராமதாஸின் கைப்பாவையாக செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து ஆதி திராவிடர் தேசிய ஆணையத்துக்குச் சென்று, நேரத்தை வீண்டிப்பதைவிட, அவர் இப்போது கூட்டணி வைத்துள்ள அதிமுக-வின் முன்னாள் தலைவி செல்வி ஜெயலலிதாவினால், சிறுதாவூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்ற காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, ராமதாஸ் சுமத்திய குற்றச்சாட்டு,

ராமதாஸின் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் மறுத்து வெளியிட்ட ஆவண நகல்,சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................