This Article is From Nov 05, 2018

மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை நீக்க முதல்வர் வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா குற்றம் சாட்டியுள்ளார்.

மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை நீக்க முதல்வர் வலியுறுத்தல்

சமீபத்தில் மிசோரம் முதன்மை செயலரை நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Aizawl:

மிசோரமில் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி. சஷாங்கை நீக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் லால் தன்ஹவாலா பிதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ மிசோரம் மக்கள் தலைமை தேர்தல் அதிகாரி சஷாங்க் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். உள்துறை முதன்மை செயலர் லால்னுன்மாவியா சுவாங்கே தேர்தல் பணிகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதால்,தேர்தலை நல்லபடியாக நடத்துவதற்கு தலைமை தேர்தல் அதிகாரியை நீக்குவதுதான் ஒரே வழி” என்று குறிப்பிட்டுள்ளார். 

40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 28-ம்தேதி நடைபெறவுள்ளது. 

.