பாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்பு

மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி கட்சி அறிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்பு

மிசோரத்தில் நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது

Aizawl: 

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் நவம்பர் 28-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலில் அம்மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி தொடர்பாக தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இதில் உண்மையில்லை. மிசோரம் தேசிய முன்னணியின் நற்பெயரை களங்கம் செய்ய பாஜக முயற்சிக்கிறது. எங்கள் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கும். ஆனால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................