This Article is From Dec 17, 2018

Miss Universe 2018: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிஸா பிரபஞ்ச அழகியாக பட்டம் பெற்றார்.

Miss Universe 2018: இறுதிச் சுற்றில் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற எந்த பாடத்தை இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று  கேள்வி எழுப்பினர்.

Miss Universe 2018: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிஸா பிரபஞ்ச அழகியாக பட்டம் பெற்றார்.

Miss Universe 2018: இந்தப் போட்டியில் கலந்து கொண்ட  93 போட்டியாளர்களை தோற்கடித்தவர் கத்ரீனா.

Bangkok:

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிஸா க்ரே பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

67-வது பிரபஞ்ச அழகிப் போட்டி தாய்லாந்தில் உள்ள முவாங்தாங் என்ற நகரத்தில் நடந்தது. இந்தியாவைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா டாப் 20யில் போட்டியிலிருந்து தோற்று வெளியேறினார். 

தென் ஆப்ரிகா மற்றும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர்கள் முறையே முதல் ரன்னர் அப் மற்றும் இரண்டாம் ரன்னர் அப் இடத்தை பெற்றனர். சிவப்பு நிற கவுனில் வந்த பிரபஞ்ச அழகி கத்ரினா எலிஸாவிற்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் பட்டத்தைப் பெற்ற தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெஹ் நெல் பீட்டர்ஸ் கிரீடத்தை சூட்டினார். 

இறுதிச் சுற்றில் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற எந்த பாடத்தை இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று  கேள்வி எழுப்பினர்.

கத்ரினா தான் மனிலா நாட்டில் உள்ள குடிசைப்பகுதிகளில் நிறைய வேலை பார்த்துள்ளேன் அங்கு வாழ்க்கை மிகவும் ஏழ்மையாகவும் சோகமாகவும் இருக்கிறது. நான் அங்குள்ள அழகைப் பார்க்க எனக்கு நானே கற்றுக் கொண்டேன்.  அங்குள்ள குழந்தைகளின் முகத்தில் அழகைக் காணவும் கற்றுக் கொண்டேன். அதே அம்சத்தைத்தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் எந்தவொரு போட்டியிலும் நல்ல விஷயங்களையே பார்க்கத்தொடங்கினேன் என்று பதில் கூறினார்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட  93 போட்டியாளர்களை தோற்கடித்தவர் கத்ரீனா. இவர் ஒரு சாகசப் பிரியராகவும் பிலிப்பைன் நாட்டு உணவுப் பிரியராகவும் இருக்கிறார். பிலிப்பினோ நாட்டு உணவுகளான அடோபோ, பலுட், இனிப்பான மாம்பழம் ஆகிய உணவுகளை பெரிதும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

 

 

.