“எது… உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சா ஆட்சி மாற்றமா..?”- Stalin-ஐ வறுத்தெடுத்த அமைச்சர்!

“சுஜித் விஷயத்தை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கியது ஸ்டாலின்தான்"- Rajendra Balaji

“எது… உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சா ஆட்சி மாற்றமா..?”- Stalin-ஐ வறுத்தெடுத்த அமைச்சர்!

எந்த தேர்தல் நடந்தாலும் ஆட்சி மாற்றம் வராது. ஸ்டாலினுக்கு ஏமாற்றம்தான் வரும்- Rajendra balaji

தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji), திமுக-வின் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை (MK Stalin) கேலி செய்யும் விதத்தில் பேசியுள்ளார். 

சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் பெயர் பெற்றவர் அதிமுக-வின் ராஜேந்திர பாலாஜி. பால் வளத் துறை அமைச்சரான இவர், ஒருமுறை பால் உற்பத்தி நிறுவனங்கள் மீதே அதிர்ச்சியளிக்கும் வகையில் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைக் கூறினார். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு, அவர் கருத்துக் கூறக் கூடாது என்று உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளது. 

அப்படிப்பட்டவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், “உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவர் பேசுவது என்னவென்று அவருக்கே தெரியவில்லை என்பதுதான் இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த தேர்தல் நடந்தாலும் ஆட்சி மாற்றம் வராது. ஸ்டாலினுக்கு ஏமாற்றம்தான் வரும்,” என்றார். 

தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் விவகாரம் பற்றி, ஸ்டாலின் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள் குறித்து அமைச்சர் பாலாஜி, “சுஜித் விஷயத்தை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கியது ஸ்டாலின்தான். இந்த மாதிரி ஒரு விஷயத்தில் கூட அவர் ஆதாயம் தேடப் பார்த்திருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்திலும் இதைப் போன்ற பல இறப்புகள் நடந்திருக்கின்றன. அது பற்றியெல்லாம் பேசாமல் வாய்மூடி இருந்துவிட்டு, இப்போது அதிமுக அரசை அவர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை,” என்று கூறினார். 

More News