‘ஏய் நாயே… ஏய் பேயே..!’- அமமுக-வை ஒருமையில் விமர்சித்த அமைச்சர்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஒருமையில் விமர்சித்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘ஏய் நாயே… ஏய் பேயே..!’- அமமுக-வை ஒருமையில் விமர்சித்த அமைச்சர்

விருதுநகரில் அதிமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராஜேந்திர பாலாஜி

ஹைலைட்ஸ்

  1. அதிமுக தரப்பினர் அமமுக-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
  2. தினகரனும், அதிமுக-வைத்தான் அதிகமாக விமர்சித்து வருகிறார்
  3. அதிமுக - பாமக கூட்டணி சமீபத்தில் உறுதியானது

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஒருமையில் விமர்சித்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

விருதுநகரில் அதிமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, ‘தினகரினின் கட்சியை எப்படி நம்மால் அழைக்க முடியும். அந்தக் கட்சியும் சின்னமும் இதுவரை அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யாமல், பெயர் இல்லாமல் இருக்கும் ஒன்றை நாம் எப்படி அழைப்பது. ஏய் நாயே… ஏய் பேயே… என்றுதான் அழைக்க முடியும். கட்சிக்குப் பெயர் கூட வைக்காமல் தினகரன் கட்சி நடத்துகிறார்' என்றார். 

முன்னதாக தினகரன், அதிமுக - பாமக கூட்டணி குறித்து பேசுகையில், ‘அந்தக் கூட்டணி பற்றி நான் என்ன சொல்ல வேண்டியுள்ளது. அன்புமணி ராமதாஸ் சொல்லியதையே வழிமொழிந்து சொன்னால், ‘மானங்கெட்டக் கூட்டணி' என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார். 

அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘தினகரன் மிகவும் மானம் உள்ளவரா. அவரை, அவரது குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளவில்லை. தினகரனை யாரும் ஏற்க மாட்டார்கள். பின்னர் எப்படி அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்' என்று கடுமையாக சாடியுள்ளார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................