ஏழாவது தலைமுறை பிறந்தது... இங்கிலாந்து இளவரசருக்கு ஆண் குழந்தை

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஏழாவது தலைமுறை பிறந்தது... இங்கிலாந்து இளவரசருக்கு ஆண் குழந்தை

தேசய விதிகளின் படி அமெரிக்க மற்றும் இங்கிலாந்து குடியுரிமையை அந்த குழந்தை பெறும்.


London: 

ஹைலைட்ஸ்

  1. பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
  2. இந்த குழந்தை அவர்கள் குடும்பத்தில் ஏழாவது தலைமுறை ஆகும்
  3. குழந்தை 3.2 கிலோ உடல் எடையுடன் பிறந்துள்ளது

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார். 

இந்த குழந்தை அவர்கள் குடும்பத்தில் ஏழாவது தலைமுறை ஆகும். இதற்கான அதிகரப்பூர்வ அறிவிப்பை ஹாரி வெளியிட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ''மே 6, 2019 அதிகாலையில் முதல் குழந்தை பிறந்துள்ளது. உலகிற்கு அந்த ஆண்குழந்தையை அரச குடும்பத்தின் சார்பில் வரவேற்கிறோம்'' என்று பதிவிட்டிருந்தார். மேலும், குழந்தை 3.2 கிலோ உடல் எடையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறும், வாழ்த்துமாறும் கூறியுள்ள அவர் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

எலிசபெத் ராணியின் பேரனான ஹாரிக்கு 34 வயதாகிறது. அவரது மனைவி மேகான் 37 வயதான அமெரிக்க நடிகை கடந்த வருடம் மே மாதம் இருவருக்கும் கோலகாலமாக திருமணம் நடைபெற்றது. 

இந்த குழந்தை எலிசபெத் ராணியின் 8வது பேரக்குழந்தையாகும். தேசய விதிகளின் படி அமெரிக்க மற்றும் இங்கிலாந்து குடியுரிமையை அந்த குழந்தை பெறும். இந்த குழந்தை நேரடியாக இளவரசனாக முடியாது. காரணம், எலிசபெத் ராணி அனுமதி கடிதம் வழங்கியவுடன் தான் ஆகமுடியும்.

ஹாரி மற்றும் மேகான் சசெக்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக உள்ளனர். 

பிரிட்டன் அரச குடும்பத்தினர் மிகப்பெரிய மீடியா வெளிச்சம் கொண்டவர்கள். ஆனால், ஹாரி மற்றும் மேகான் ஹாலிவுட் நடிகர்களாக தான் வாழ்கிறார்கள்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................