This Article is From Jan 03, 2019

‘உடலை மட்டும் கொடுங்க..!’- மேகலயா சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பங்கள் கதறல்

15 ஊழியர்களின் குடும்பங்கள், ‘சிக்கியுள்ள எங்கள் உறவினர்களின் உடலை மட்டும் மீட்டுத் தந்தால் போதும்’ என்று கதறியுள்ளனர்.

‘உடலை மட்டும் கொடுங்க..!’- மேகலயா சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பங்கள் கதறல்

மீட்புப் படையில் இருக்கும் டைவர்ஸ், நீர் இரைத்துள்ளது போதாது என்றும், இன்னும் அதிக அளவிலான நீர் இரைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்

Guwahati:

மேகாலயாவின் கிழக்கு ஜெய்னிதா மலைப் பகுதியில் இருக்கும் ‘எலிப் பொறி' சுரங்கத்தில் 21 நாட்களுக்கு முன்னர், அந்த சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மேகாலயா அரசுத் தரப்பும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில் 15 ஊழியர்களின் குடும்பங்கள், ‘சிக்கியுள்ள எங்கள் உறவினர்களின் உடலை மட்டும் மீட்டுத் தந்தால் போதும்' என்று கதறியுள்ளனர். 

மீட்புப் படைக்குத் தலைமை தாங்கியுள்ள ரெகினால்டு சுசுங்கி, ‘ஒரிசாவிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுரங்கத்திலிருந்து அதிக அளவு தண்ணீரை இரைத்து விட்டனர். அடுத்தடுத்த வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன' என்றார்.

மீட்புப் படையில் இருக்கும் டைவர்ஸ், நீர் இரைத்துள்ளது போதாது என்றும், இன்னும் அதிக அளவிலான நீர் இரைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மிகவும் பிரபல மீட்பு வீரரான ஜஸ்வந்த் சிங் கில், ‘மீட்புப் படையினரின் வேகம் போதவே போதாது. அதே நேரத்தில் மீட்புப் படையை வழி நடத்த சரியான தலைமை இல்லை. இந்நேரத்தில் அவர்களை வேகமாக வேலை செய்யச் சொல்லவும் முடியாது' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டே, மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். பல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், ‘மேகாலயாவின் நிலத்தடி நீர் மாசுக்கு நிலக்கரி சுரங்கங்கள்தான் காரணம்' என்று புகார் தெரிவித்த பின்னர், தீர்ப்பாயம் தடை உத்தரவை பிறப்பித்தது. ஆனால், இன்றளவும் மேகாலயாவில் பல இடங்களில் சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டுத்தான் வருகின்றன.

.