This Article is From Aug 10, 2019

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தை புறக்கணித்த ராகுல், சோனியா!

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனியா காந்தி தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் தாங்கள் இருப்பது சரியானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தை புறக்கணித்த ராகுல், சோனியா!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

New Delhi:

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்திலிருந்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வெளியேறியுள்ளனர். பிரியங்கா காந்தி மட்டும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கூட்டத்திலிருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, தாங்கள் பங்கேற்பது சரியாக இருக்காது என்றும், அது தலைவர் தேர்வில் விளைவை ஏற்படுத்தி விடும் என்றும் கூறினார். 

தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் பிரியங்கா காந்தி மட்டும் கலந்து கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 46 வயதாகும் அவர், உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக உள்ளார்.

அவரை அடுத்த தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுகின்றன. இதற்கான முயற்சியில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இறங்கினார். இருந்தபோதிலும், தனது தாயார் மற்றும் சகோதரியை தலைவர் பொறுப்புக்கு கொண்டு வரக்கூடாது என்பதில் ராகுல் விடாப்பிடியாக இருக்கிறார். 

மக்களவை தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்ததில் இருந்து, அதன் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளார். தேர்தலில் மூத்த தலைவர்கள் யாரும் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன் வைக்கப்பட்டன. 

இதன்பின்னர், ராஜினாமா கடிதத்தை அளித்த ராகுல், அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அடுத்த தலைவராக மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. 

இந்த நிலையில் இன்று தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.