திமுக கூட்டணியில் மதிமுக! - தொடரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம் பிடித்துள்ளதாகவும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

இதுகுறித்து, அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் நடைபெறுகிறது. எந்தத் தொகுதிகள் கேட்கிறோம் என்பதை தற்போது கூறமுடியாது என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுகவுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டன. இதில், இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், அவை எந்தத் தொகுதிகள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுடனான கூட்டணி பங்கீட்டை நாளை இறுதி செய்யும் என கூறப்படுகிறது.

இதேபோல், தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளது என கூறப்படுகிறது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வரும் நிலையில், இழுபறியில் இருக்கும் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறது என்பது குறித்தும் நாளை தெளிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................