கராச்சி விமான விபத்து! விபத்திற்கு முன் விமானியின் திகிலூட்டும் உரையாடல்கள்!

விமானியிடமிருந்து கடைசியாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாரு ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்தோம் என மாநில கேரியரின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா எச். கான் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விமானம் 8303 தனது இரு என்ஜின்களும் செயலிழந்துவிட்டதாக விமானி கடைசியாக கூறினார்

ஹைலைட்ஸ்

  • A PIA plane crashed while trying to land in Karachi
  • In an audio clip, pilot is heard saying he lost both engines
  • The plane first hit a mobile tower and crashed over houses
New Delhi:

நேற்று பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 99 பேர் பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் விபத்திற்கு உள்ளாவதற்கு முன்னதாக,  பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானத்தின் விமானிக்கும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர்(ATC) ஒருவருக்கும் இடையே நடந்த கந்துரையடலை liveatc.net என்கிற வலைதளம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின்  பி.கே 8303 என அடையாளம் கொண்ட ஏர்பஸ் ஏ 320 ரக விமானத்தின் விமானி, தங்களது விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழந்துவிட்டதாக கூறுகிறார். பின்னர் “மேடே“ என மீண்டும் மீண்டும் கூறுகிறார். மேடே என்பது உயிருக்கான ஆபத்தினை குறிக்க சர்வதேச அளவில் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு குறியீடு ஆகும்.

உரையாடல்களின் சுருக்கம்;

விமானி; பாகிஸ்தான் விமானம் 8303 அணுகுமுறை

கட்டுப்பாட்டு மையம்(ATC): ஒகே சார்.

விமானி: எங்களுடைய விமானம் இடது பக்கம் திரும்ப வேண்டுமா?

ATC: திரும்புவதற்கு அனுமதியுள்ளது

விமானி; நாங்கள் நேராக செல்கின்றோம். எங்கள் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்துவிட்டது.

ATC: உங்களின் தரையிரக்கத்தினை உறுதிப்படுத்தவா?

விமானி: (தெளிவற்ற சப்தங்கள்)

ATC: ஓடுபாதை 2 5ல் தரையிரங்கலாம்

விமானி: ரோஜர்(உங்களுடைய தகவலை நான் பெற்றுள்ளேன்)

விமானி: மேடே, மேடே, மேடே, பாகிஸ்தான் 8303

ATC: பாகிஸ்தான் 8303, ரோஜர் சார். இரண்டு ஓடுபாதைகளும் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளது.

இத்துடன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சில நிமிடங்களில் பாகிஸ்தான் 8303 என அடையாளம் கொண்ட ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சியின் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. இதில் பலர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதையடுத்து அப்பகுதியில் வான் முழுக்க கரும்புகை மேலெழ தொடங்கியது. வீதிகள் முழுக்க குப்பைகளாக கிடந்தது. ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு விரைந்தன.

விமானமானது முதலில் ஒரு செல்போன் டவர் மீது மோதி பின்னர் ஒரு கட்டிடத்தின் மீது மோதுவதை நேரில் கண்டதாக ஷகீல் அகமது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது உள்நாட்டு போக்குவரத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகள் பழமையான ஏர்பஸ் ஏ320 பாகிஸ்தானின் கிழக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதியான கராச்சிக்கு தனது பயணத்தினை மேற்கொண்டது. 

விமானியிடமிருந்து கடைசியாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாரு ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்தோம் என மாநில கேரியரின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா எச். கான் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு ஓடுபாதைகளும் தயாராகவே இருந்தன ஆனால், துர்திஷ்டவசமாக விமானம் விபத்திற்கு உள்ளானது. என அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com