This Article is From Dec 16, 2019

Protests At University In Lucknow: மாணவர்கள் வெளியேற வழியின்றி வாயிலை அடைத்த காவல்துறை

மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது.

காவல்துறையினர் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற கூடாது என்று பிரதான வாயிலை அடைத்துவிட்டனர்.

ஹைலைட்ஸ்

  • Massive student protests at Lucknow's Nadwatul Ulama Institute
  • Stones were thrown at cops, students pushed against the closed gates
  • Student protests have erupted across the country over new citizenship law
Lucknow:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் நேற்று மாலை மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை எதிர்த்து லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். 

இதனால், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததால் அணிவகுப்புக்காக  மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேற முயன்றனர். காவல்துறையினர் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற கூடாது என்று பிரதான வாயிலை அடைத்துவிட்டனர். 

வளாகத்திற்கு உள்ளிருந்து மாணவர்கள் காவல்துறையினர் மீது கற்கள், செங்கற்கள் மற்றும் செருப்பினை மாணவர்கள் வீசினர். காவல்துறை வாயிலை சங்கிலியால் பூட்டினார்கள். 

மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது. 

சுமார் 150 விநாடிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 30 விநாடிகள் கல் வீச்சும் இருந்தது. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்பி செல்கின்றனர்” என்று லக்னோ காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி தெரிவித்தார். 

.